முதுமலை காட்டுச் சாலைக்குள் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை … Viral video
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் காட்டேஜுக்கு சீல்
கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காட்டேஜுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் கோட்டாட்சியர் சிவராம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ் உரிமையாளர் நிக்சன் மோசஸிடம் விசாரணை…
மின்சார ரெயில் சேவை குறைந்ததால் அலைமோதிய கூட்டம்
தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக,…
சரக்கு ரெயில் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி
அரக்கோணம் காந்திநகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது52). இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பணிமாறுதல் பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இந்த…
‘வரலாம் வா… வரலாம் வா…’
வெள்ளத்தில் ரெயிலுக்கு வழிகாட்டிய பாயின்ட்மேன்கள். வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில்.
சதுரகிரி மலை பாதை திறக்கும் தேதி அறிவிப்பு
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள்…
மூணாறு மாட்டுப்பட்டி அணை திறப்பு …
கேரளா -இடுக்கி மாவட்டம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மூணார் மாட்டுப்பட்டி அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில்,அணையின் ஒரு மதகு 10 செ.மீ திறக்கப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சிவெளியாகி உள்ளது.
சச்சிதானந்தம்.எம்.பியின் கோரிக்கை வெற்றி
மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று…
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதனுக்கும் எழும்பூர் வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் விஜயகுமாருக்கும் இடையேயான பிரச்சனை கைகலப்பில் முடிந்ததால் 7 வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த வழக்கறிஞர்கள் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்…