இந்தியாவில், ஓர் தனி மனிதர் சராசரியாக, ஆண்டுக்கு, 15 கிலோ காகிதத்தை பயன்படுத்துகிறார். ஆண்டுதோறும், காகிதத்தின் பயன்பாடு, 6 முதல் 7 சதவீதம் உயர்கிறது. சுற்றுச்சூழலின் நண்பனாக திகழும் காகித்தின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த தினம் கொண்டாடப்படுவதால், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகளவு ஏற்படும் என்ற நம்பிக்கையை இந்த தினம் நமக்கு கூறுகிறது.
இதுகுறித்து, 1960-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ். விஸ்வநாதன் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட ஆலையின் மேலாண் இயக்குநர் S. காசி விஸ்வநாதன் கூறும்போது,

காகிதம் ஒரு உன்னதமான பொருள். படிப்பதற்கும் செய்திகள் மக்களிடம் சென்று சேருவதற்கு பயன்படும். சுத்தமான பொருட்களை பயன்படுத்துவதற்கும், பொருட்களை பண்டல் செய்து அனுப்புவதற்கும் பயன்படுகிறது.
காகிதம் தயாரிப்பதற்கு மரங்களை வனத்தில் உள்ள மரங்களை வெட்டாமல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நாங்களே விவசாயிகளிடம் மரக்கன்றுகளை கொடுத்து தகுந்த சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி வளர்த்து வருகிறோம். இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கிறது.
இந்தியாவிற்கு தாள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, FTA, Free Trade Agreement விதிமுறைப்படி சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொழுது இறக்குமதி வரி கிடையாது. சில நாடுகளில் 5 முதல் 6 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அவற்றை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், வெளிநாடுகள் உள்ளது போல, 99 ஆண்டு காலம் அரசு புறம்போக்கு நிலங்களை, காகித ஆலை நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கினால் அதில் மரம் நட்டு வளர்க்க முடியும். அதிக காகிதங்கள் உற்பத்தி செய்ய முடியும். இதனால் காகித தொழில் வளர்ச்சி பெறுவதோடு சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கும்.
ஆகஸ்ட் 1-ம் தேதி தேசிய காகிதனமாக கடைபிடிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு, நடனம் நாடகம் உள்ளிட்ட விழிப்புணர் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன. காகிதத்தில் முக்கியத்துவம் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வருகின்ற 03-08-2024 அன்று ஈரோட்டில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிலும் காகிதத்தின் முக்கியத்துவம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
காகித நுகர்வு பார்க்கும் பொழுது வளர்ந்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆண்டுக்கு 400 கிலோ வரை ஒரு தனிநபர் காகிதத்தை பயன்படுத்துகிறார். சர்வதேச அளவில் சராசரியாக ஆண்டுக்கு 57 கிலோ காகிதம் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் முன்பு 9 கிலோவாக இருந்தது. இப்போது 15 கிலோவாக உள்ளது. காகிதத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் மேம்படும்.
குழந்தைகள் காகிதத்தில் கையினால் எழுதினால் அவர்களுக்கு எழுத்தும், வாசிப்பும் மனதில் பதியும். இங்கிலாந்து நடந்த ஆய்வில் பொதுமக்கள், பேப்பர், மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களில் படிப்பதை ஆய்வு செய்ததில் காகித மூலம் படிப்பது, மனதில் பதியும், கண்களுக்கும் பாதுகாப்பு எனவும் தெரியவந்துள்ளது.

மின்னணு சாதனங்கள், பிளாஸ்டிக், பொருள்கள் சுற்றுச்சூழலை பாதிப்பு ஏற்படுத்தும். ஆனால் மறுசுழற்சிக்கு பயன்படும் காகிதத்தை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
இந்தியாவில் மகாராஷ்டிரா காகித தொழில் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. காகிதத்தில் அச்சிடுதல்-எழுதுதல், செய்தித்தாள் பேப்பர், பேக்கிங் பேப்பர், டிஷ்யூ பேப்பர் என 4 வகை உள்ளன.
எங்களைப் போன்ற காகித ஆலை நிறுவனங்கள், மரங்களை வெட்டாமல்/ காடுகளை அழிக்காமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். காகிதப் பொருட்கள் எளிதில் மக்கும் தன்மை உடையது. சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் காகிதங்களை தயாரிக்க முடிகிறது. இனிவரும் காலத்தில் அதிக அளவில் காகிதங்களை பயன்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் பங்களிப்பு செய்து தர வேண்டும் என்றும், பள்ளிபாளையம் ஷேசஷாயி காகிதாலை மேலாண் இயக்குனர் எஸ். காசி விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
