• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

Byஜெ.துரை

Sep 20, 2025

2023 – 2024, 2024 – 2025-ஆம் ஆண்டிற்கான RTE தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி.சதீஸ்,மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார்,மாநில பொருளாளர் வெங்கடாஜலபதி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

2023 – 2024, 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான RTE தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் நலன் பாதுகாக்க தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் நலவாரியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளை பாதுகாக்க தனியார் பள்ளிகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். 5 – ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும்.

TC இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படக்கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தினந்தோறும் புள்ளி விவரங்கள் கேட்பதை அரசு கைவிட வேண்டும்.

RTE யில் தற்போது படிக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். DTCP / LPA காரணம் காட்டி அங்கீகாரத்தை நிறுத்தக்கூடாது. பெற்றோர்களிடம் OTP கேட்பதை அரசு கைவிட வேண்டும்.

தேங்கியுள்ள அங்கீகார Renewal ஐ நான்கு சான்றிதழ்கள் இருந்தால் உடனடியாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.