தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜ், துணைச் செயலாளர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், பாஜக பிரமுகர் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சலுகை விலை வீட்டுமனை கேட்டு பத்திரிக்கையாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் வரை தேர்தல் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றவில்லை என்று பத்திரிக்கையாளர்கள் பேசினர்.
மேலும், அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிக்கையாளர்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குறியது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்தால் மாவட்டம் முழுவதும் பத்திரிக்கையாளர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். மேலும்.
தூத்துக்குடி மாவட்டம். பிஆர் ஓ நவீன் பாண்டியன் மற்றும் ஏபிஆர்ஓ முத்துக்குமார் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பத்திரிகை யாளர்கள் சங்கங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.