• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கேன் குடிநீர் வாங்குவோர் கவனத்திற்கு…

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தகுந்த உரிமை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஓட்டப்பட்டிருக்கும் லேபிள்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடிநீர் கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். உற்பத்தியின் போது குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்புதான் நுகர்வோருக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பாட்டில் குடிநீர் வாங்கும் போது காலாவதி தேதி குறித்த தகவல் குறித்து சரிபார்க்க வேண்டும். பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது..