• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

2 வது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம்..,

ByK Kaliraj

Dec 24, 2025

சிவகாசி பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஓடைத் தெருவில் வசிப்பவர் அக்பர்அலி(வயது5 ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே கணவனை இழந்த செய்யது அலி பாத்திமா( வயது 35 ) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

செய்தலி பாத்திமாவின் முதல் கணவர் முபாரக்அலி கடந்த 2017ம் ஆண்டு அருப்புக்கோட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இவர்களிருவருக்கும் பர்வீன் பானு( வயது 18 ) என்ற மகளும், செய்யது பாருக் வயது 16 ) என்ற மகனும் உள்ளனர். பர்வீன் பானு 11ம் வகுப்பும், செய்யது பாருக்10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்யதுஅலி பாத்திமாவின் முதல் கணவர் முபாரக் அலி விபத்தில் உயிரிழந்த நிவாரணத் தொகை ரூபாய் 11-லட்சம் வரை கிடைக்கப்பெற உள்ளது.

இந்த நிவாரணத் தொகையை தனது இரு பிள்ளைகளின் பெயரில் வங்கியில் செலுத்த செய்யது அலி பாத்திமா திட்டமிட்டுள்ளார் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து தனக்கே பணத்தை கொடுக்க வேண்டும் அக்பர்அலி தகராறு செய்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிற்குள் பெட்ரோல் கேனுடன் சென்ற அக்பர் அலி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, அவரது முதல் கணவரின் தாயான சிக்கந்தர் பிவி ( வயது 60), மகள் பர்வீன் பானு 18, மகன் செய்யது பாருக் 16, ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து 4 பேரையும் உயிரோடு எரித்து கொலை செய்ய முயன்றார். வீட்டிலிருந்து புகை வந்ததாலும், அலறல் சத்தம் கேட்டும் பக்கத்தில் உள்ளவர்கள் அருகிலுள்ள சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு படு காயமடைந்த அனைவரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் அக்பர் அலிக்கும் காய மேற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிருக்கு போராடிய நிலையில் செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவரின் தாயான சிக்கந்தர் பீவி 60, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.