சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நள்ளிரவில் வங்கியில் கொள்ளை முயற்சி பணம் நகைகள் தப்பின. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கியின் ஜன்னல் மற்றும் நுழைவாசல் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். தொடர்ந்து வங்கிக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்த நிலையில் கொள்ளையர்கள் வங்கியிலிருந்து தப்பி ஓடியுள்ளனர் இன்று காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள் வங்கியின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.