• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ரஷ்ய அதிபர் புதினை குண்டுவீசி கொல்ல முயற்சி

ByA.Tamilselvan

Sep 16, 2022

ரஷ்ய அதிபர் புதின் கார் மீது குண்டுவீசி கொல்ல முயற்சி நடைபெற்றதாக ஸ்பெனில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர். புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது. அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனால் புதின் சென்ற காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் காரில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில் , புதினையும் கொல்ல முயற்சி நடைபெற்றதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.