• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு- அமெரிக்க ரிப்போர்ட்

ByA.Tamilselvan

May 17, 2023

இந்தியா, ரஷியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை குறிவைப்பதாக அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவின் அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தற்போது வெளியிட்டு உள்ளது.இந்தியாவில் தொடர்ந்து மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்தியாவின் ஹரிதுவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை வழக்கறிஞர்கள், மத தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டித்து உள்ளார்கள். இந்தியா தனது வரலாற்று பாரம்பரியமான பன்முகத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வலுவாக பற்றி இருக்க வேண்டும்.இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஏராளமான மத வன்முறைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. குஜராத்தில் சீருடை அணியாத போலீஸ் அதிகாரிகள் பொதுவெளியில் 4 இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கியது, மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்பட்டது போன்றவை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.