• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

புளியங்குடியில் அதிமுகவே வெல்லும் – அருண்மொழி சபதம்

Byஜெபராஜ்

Feb 6, 2022

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அதிமுகவின் கோட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

விரைவில் நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலில் புளியங்குடி நகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புளியங்குடி நகராட்சி.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்து இருக்கும் ஒரே நகராட்சி புளியங்குடி மட்டுமே,.

லெமன் சிட்டி என்று அழைக்கப்படும் புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகளும், 27668 ஆண்வாக்காளர்களும், 28082 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 55750 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவில் மூன்று வார்டுகளும், தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவில் மூன்று வார்டுகளும், பெண்கள் பொது பிரிவில் பதினான்கு வார்டுகளும், பொது பிரிவில் பதிமூன்று வார்டுகளுமாக பிரிக்கப்பட்டது.

இரண்டாம் நிலை நகராட்சியாக புளியங்குடி 1969 ஆண்டில் நகராட்சியாக மாற்றப்பட்டது. உள்ளாட்சி துறை அமைச்சராக கருணாநிதி இருந்த காலம் அது. முதல்முதலில் புளியங்குடி நகராட்சி தேர்தலின் போது திமுக காங்கிரஸ் போட்டி உச்சத்தில் இருந்தது.

அப்போது சுயட்சையாக போட்டியிட்ட சிந்தாமணியை சேர்ந்த வெங்கட்ராமன் திமுகவில் சேர்ந்து புளியங்குடியின் முதல் நகராட்சி சேர்மன் ஆக பதவி ஏற்று கொண்டார்.

அதன் பின் நடைபெற்ற புளியங்குடி நகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறவே இல்லை. 1986 ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் செல்லையா நாடார் வெற்றி பெற்றார்.

அதன்பின் 1996 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் திமுக தமாக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் புளியங்குடியில் தமாக-வை சேர்ந்த கார்த்திகாவை தோற்கடித்து, அதிமுக-வை சேர்ந்த குருவம்மாள் சங்கரபாண்டியன் வெற்றி பெற்றார்.

2001 ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் திமுகவை சேர்ந்த காந்திமதியை தோற்கடித்து அதிமுகவை சேர்ந்த தேவகி குழந்தைவேலு வெற்றி பெற்றார்.

2006 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த சண்முகத்தாயை தோற்கடித்து அதிமுகவை சேர்ந்த டாக்டர் துரையப்பா வெற்றி பெற்றார். 2011 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த நகர செயலாளர் செல்வகுமாரை தோற்கடித்து அதிமுகவை சேர்ந்த சங்கரபாண்டியன் 160 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நகர செயலாளர் செல்வகுமாரின் தோல்வியை தற்போது வரை திமுக தொண்டர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.

இரண்டு முறை திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது நடைபெற்ற தேர்தலிலும் புளியங்குடி நகராட்சி அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. தற்போது புளியங்குடி நகராட்சி சேர்மன் பதவி தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புளியங்குடி நகராட்சியை அதிமுகவிடமிருந்து மீட்டு திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிமுக வின் சேர்மன் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் டாக்டர் அருண்மொழி!

பல வருடங்களாக மருத்துவத்துறையில் கூடுதல் இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் பணியாற்றி நற்பெயர் பெற்றிருந்தாலும், புளியங்குடி அரசு மருத்துவமனையில் மாவட்டத்திலேயே முதன்மை மருத்துவமனையாக ஆக்கியதன் விளைவாக, மக்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கை பெற்றவர் என்பதால் வெற்றிக்கனி என்பது இலகுவானது தான் என்றார்

அதிமுக வேட்பாளர் டாக்டர் அருண்மொழி மனுத் தாக்கல் செய்தபோது, உடன் செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், பொறுப்பாளர் சங்கரபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்!

பின்னர், டாக்டர் அருண்மொழி கூறுகையில், “என் மீது அதிக பாசம் வைத்திருக்கும் புளியங்குடி மக்களுக்காக நான் பதவியேற்றவுடன் இலவசமாக ஐஏஎஸ், ஐபிஎஸ், விஏஓ மற்றும் அரசு பணிக்கான இலவச கோச்சிங் சென்டர் ஆரம்பித்து நமது பகுதி படித்த இளைஞர்களை வளம் பெறச் செய்வேன்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து குடிநீருக்காக மிகப்பெரிய வாட்டர் டேங்க் கட்டி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க செய்வேன்! தெருவாரியாக கணக்கெடுத்து முதியோர்களுக்கு அரசால் கொடுக்கப்படும் உதவித்தொகையை பெற வழிவகை செய்வேன்!

கிடப்பில் போடப்பட்ட காய்கறி மார்க்கெட்டை ஹைடெக் மார்க்கெட்டாக செய்து தருவேன்! புளியங்குடி நகராட்சி மீது அக்கறைகொண்ட பொதுநல சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி புளியங்குடி நகராட்சியை தமிழகத்திலேயே முதன்மை நகராட்சியாக ஆக்கித் தருவேன் போன்ற தேர்தல் வாக்குறுதிகளோடு டாக்டர் அருண்மொழி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.