• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் சேவாசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவல் நிலைய சுற்று சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாசகங்கள், தேசத்தலைவர்கள் ஓவியங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் மற்றும் காவல் நிலையத்திற்குள் எழுதப்பட்ட தன்னம்பிக்கை வார்த்தைகள், மிகவும் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் காரியாபட்டி காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை பாராட்டி ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டது அதனையும் பார்வையிட்டு சார்பு ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.