• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு இடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 வது நினைவு தினம் அவரது நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 225வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கபடுகிறது. இதனை முன்னிட்டு சிவகங்கை அரண்மனை வாசல் அருகே வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவிடத்தில், சிவகங்கை ராணி மதுராந்தாக நாச்சியார், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA, முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்போது வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் திருவுருவ சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு வென்ற ராணி வேலுநாச்சியாரின் புகழ் உலகம் முழுவதும் பரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாடப்புத்தகங்களில் அவரது வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும், வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு, வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசிற்கு, ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.