• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி

ByA.Tamilselvan

Jun 6, 2022

நைஜீரியா ஒண்டோவில் உள்ள ஓவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழுந்தைகள் பெண்கள் உட்பட50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்புதகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்தான் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 முறை நடைபெற்ற துப்பாக்கிசூட்டில்பலர் பலியாகினர்.இந்த அதிர்ச்சி சம்பவம் சுவடு முறைவதற்குமுன்பே மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்வம் நைஜீரியாவில் நடைபெற்று இருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் பிரார்த்தனையை முன்னிட்டு ஏராளமானோர் தேவாலயத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில் செயின்ட்பிரான்சிஸ் தேவாலயத்தில் நுழைந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில்50 பேர் பலியாகி உள்ளனர்.தேவாலயத்தில்நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும்பலர் படுகாயமடைந்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கைமேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இத்தாக்குதலுக்கு எந்தபயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.