• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சதுரகிரிமலையில், வளர்பிறை பிரதோஷம் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்…

ByKalamegam Viswanathan

Aug 29, 2023

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆவணி மாத வளர்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். காலை 6 மணியில் இருந்து தாணிப்பாறை அடிவாரப்பகுதி நுழைவு பாதை திறக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 30ம் தேதி (புதன் கிழமை) ஆவணி மாத பௌர்ணமி நாளில், சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல், வரும் செப்டம்பர் 1ம் தேதி (வெள்ளி கிழமை) வரை பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.