• Mon. May 6th, 2024

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்…

Byகுமார்

Oct 9, 2022

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம், மேலும் கஞ்சா கடத்தலுக்கு உதவும் கூரியர் சர்வீஸ் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழ்க காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக, அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் கணக்குகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது இந்த ஆண்டில் 5 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின், ரூபாய் 8,21,30,623/- மதிப்புள்ள வங்கி கணக்கு மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 136 வழக்குகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் 296 வங்கி கணக்குகளில் உள்ள ரூபாய்.37,62,531/- முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் மீண்டும் ஈடுபட்டுள்ள 22 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டு வரும் 25 குற்றவாளிகளின் முந்தைய வழக்குகளில் பெறப்பட்ட பிணை ஆணையினை ரத்து செய்து நீதிமன்ற காவலில் அடைக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 225 நபர்களிடம் மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபடமாட்டோம் என்று பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் காவல் துறையின் தீவிர கண்காணிப்பில்’ உள்ளனர்.

பிணை பத்திரம் பெறப்பட்டு மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்தூராமன் ஆகியோரது பிணைபத்திரம் ரத்து செய்யப்பட்டு 10 மாத காலம் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளின் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கிராம் கஞ்சாவை அழிப்பதற்கு, மண்டல அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு, அவர்களது முன்னிலையில் என்விரான்மென்ட் லிமிட்டட், உண்டுறுமிகிடக்குளம், அ.முக்குளம், திருச்சுளி, விருதுநகர் மாவட்டத்தில் வைத்து வரும் 17.10.2022ம் தேதி அழிக்கப்பட உள்ளது. ராம்கி எனர்ஜி அண்டு மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய கஞ்சா வழக்கின் எதிரி முத்து 47, என்பவரது கனரா வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அசையும் சொத்தான Yamaha Two wheeler மற்றும் ரூபாய்1,08,393/- மதிப்புள்ள அசையா சொத்துக்கள், அதே போல் ஒத்தக்கடை காவல் நிலைய கஞ்சா வழக்கின் வழக்கின் எதிரிகள் பிரகாஷ், நிஷந்தன் என்ற நிஷாந்த், குணா என்ற குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரூபாய்.55,61,000/ மதிப்புள்ள அசையா சொத்துகள், அசையும் சொத்து 1 பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் 5 வங்கி கணக்குகள் இன்று 08.10.2022ம் தேதி முடக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் மதுரை மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் இந்த கஞ்சா கடத்தலுக்கு உதவும் கூரியர் சர்வீஸ் உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *