• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி

Byமதி

Sep 28, 2021

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சில படங்களில் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த், கடம்பன், டெடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர் ஆர்யா – சாயிஷா ஜோடி.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையின் பெரியரை வெளியிட்டுள்ளார் ஆரியா. அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆர்யா நடிப்பில் தற்போது எனிமி மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் உருவாகி உள்ளன. இதில் எனிமி படத்தில் வில்லனாகவும், அரண்மனை 3 படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ஆர்யா. இந்த இரண்டு படங்களும் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.