மதுரை அவனியாபுரத்தில் உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக 6 ம் தேதி காலைஅருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் அணுக்கை பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜையும் மாலையில் கும்ப அலங்காரம் வேதிகார்ச்சனையுடன் முதல் கால யாகசாலை பூர்ணாஹீதியுடன் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 7.09.25 அன்று காலை 6 மணியளவில் விக்னேஷ்வர் பூஜை கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மாஹ பூர்ணா திகுதியுடன் தீபாராதனை நடைபெற்றது.
காலை 9 மணிக்குள் கடம் புறப்பாடு அருள்மிகு அருணகிரி சுவாமிகள் ஆலய விமான மஹா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து மூலவருக்கும் மற்றும் பரிகார மூர்த்திகளும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 12 மணியளவில் கோவிலில் 5 ஆயிரம் அன்னதானம் வழங்கப்பட்டது.
அருணகிரி சுவாமிகள் ஆலய கும்பாபிஷேக விழாவிற்குகான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் அன்பரசன் செயலாளர் மார்கநாதன் பொருளாளர் கனகாம்புஜம், சிவமாணிக்கம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து சிவமாணிக்கம் அடியவர் கூறுகையில்
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து வந்த அருணகிரி சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் இங்கு பக்தர்கள் தங்கள் நோய் நொடிகளை வேண்டி விபூதி வாங்கி பூசி சென்றால் பூரண நலம் பெறுவார்கள் தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது மற்றும் 70-வது ஆண்டு அருணகிரியார் குருபூஜைகளும் நடைபெறுகிறது.













; ?>)
; ?>)
; ?>)