• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா:

சாலிகிராமம் நாடார் சமூகத்தினரும் மற்றும் வியாபார நண்பர்களும்* இணைந்து நடத்தும்அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 49வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு விசேஷ அபிஷேகமும்,மாலை 6.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு சந்தனக்காப்பும் சிறப்பு ஆராதனை பூஜையும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சாலிகிராமம் சுற்று வட்டார நாடார் சங்க நிருவன தலைவர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நெல்லை தூத்துகுடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ் கலந்து கொண்டார் மற்றும் அப்பகுதி மக்கள் வியபாரிகள் என்று அநேக பேர் கலந்து அம்மன் அருள் பெற்று சென்றனர்.