• Mon. Apr 29th, 2024

கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா..!

கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்கப்பட்டது. இதனை தமிழக அமைச்சர்கள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வருகை தந்து தொடங்கி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து இன்று முத்தமிழ்த்தேர் ஊர்தி பயணம் தொடங்கியது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இன்று 4ம் தேதி தொடங்கி 29 மாவட்டங்கள் வழியாக சென்னை செல்கிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி பயணம் டிசம்பர் 5ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘முத்தமிழ்த்தேர்’ பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) காலை 11.30மணியளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கோண பூங்காவில் தொடங்கியது. இந்த முத்தமிழ்தேரினை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி, நாளை சென்றடைகிறது. அதன் பின்பு 6ம் தேதி தூத்துக்குடி, 7ம் தேதி விருதுநகர், 8ம் தேதி தேனி, 9, 10 தேதிகளில் மதுரை, 11ம் தேதி ராமநாதபுரம், 13ல் புதுக்கோட்டை, 14ல் சிவகங்கை, 15ல் நாகப்பட்டினம் செல்கிறது. 16ம் தேதி மயிலாடுதுறை, 17ம் திருவாரூர், 18ம் தேதி தஞ்சாவூர், 19ல் திருச்சி, 20ல் திண்டுக்கல், 2160 கோவை, 22ல் திருப்பூர், 23ல் ஈரோடு, 24ல் கரூர், 25ம் தேதி நாமக்கல், 26ம் தேதி சேலம் செல்லும். 27 தருமபுரி, 28ம் தேதி கிருஷ் ணகிரி, 29ல் திருப்பத்தூர், 30ம் தேதி திருவண்ணா மலை, டிசம்பர் 1ம் தேதி விழுப்புரம், 2ம் தேதி செங்கல்பட்டு, டிசம்பர் 3 காஞ்சிபுரம் சென்று டிசம்பர் 4 சென்னை சென்றடைகிறது என தெரிவித்தள்ளனர். இந்த நிழ்ச்சியை காண்பதற்காக திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் வருகை தந்து பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும், இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் பேட்டியளிக்கையில் “கலைஞருடைய நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கின்ற வகையில் பேனா அவருடைய எழுத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய பேனா வடிவில் தேர் அமைத்து, அந்த தேரில் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவரது தாயார் சிலைகளை அமைத்து அங்கு வாழ்விடம் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எழுத்துக்களை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அலங்கார ஊரில் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *