தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம்,கிழக்கு ஒன்றியம் ,சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், கிருஷ்ணகுமார், மேற்கு ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், வெம்பக்கோட்டை கிளைச் செயலாளர் ரவிசங்கர், மற்றும் மேற்கு, கிழக்கு, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
