இன்றைய கணினி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே போட்டி நடைபெறும் என வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு. தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று அதற்கு முன்னோட்டம்போல ஆகிவிட்டது.
பிரபல சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் 7,800 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது. அவர்களது இடத்துக்கு செயற்கை நுண்ணறிவு தானியங்கி கருவிகள் பணியில் அமர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.ப்ளூம்பெர்க் செய்து நிறுவனத்துக்கு ஐபிஎம் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் அரவிந்த் கிருஷ்ணா முன்னதாக பேட்டியொன்றை அளித்திருந்தார். ஐபிஎம் 7,800 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். சேட்பாட் எனப்படும் அதிநவீன கணினி தொழில்நுட்பம் தற்போது தனியார் நிறுவனங்களில் வளர்ந்து வருகிறது.ஒரு நிறுவனத்தின் கணக்கர் பணியைக்கூட இந்த சேட்பாட் கணினியால் கச்சிதமாக செய்து முடிக்கமுடியும். இதுபோல எதிர்காலத்தில் பெருநிறுவனங்களின் பல துறைகளில் உள்ள பணியார்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சேட்பாட் பணியில் அமர்த்தப்படலாம்.
இதனால் பல ஆண்டு காலம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பலரது வேலை பறிக்கப்படலாமென கணிக்கப்பட்டுள்ளது. ஐபிஎம்போல பல மென்பொருள் நிறுவனங்கள் ஆட்டோமேஷன் வளர்ச்சி காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இது ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சி என நாம் மார்தட்டிக்கொண்டாலும் மறுபக்கம் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.
மனிதனின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்..!
