• Sat. Apr 27th, 2024

பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய பேருந்துகள் வாங்க ஏற்பாடு – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Byகுமார்

Jan 4, 2022

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதிப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிதாக வந்துள்ள ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்., தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அது குறித்த கேள்விக்கு.?
பொங்கல் பண்டிகைக்கு தனித்தனியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் எப்படி இயக்கப்பட்டதே கூட்ட நெரிசலை தவிர்த்து பேருந்துகள் இயக்கப்படும் இதனால் கொரோனா பரவல் ஏற்படாது.

பேருந்துகளில் பாதுகாப்பு நெறி முறைகள் கடைபிடிக்கப்படும் என்ற கேள்விக்கு.?
முதல்வரின் உத்தரவின் பேரில் பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், முகக்கவசம் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
புதிய பேருந்துகள் வாங்க திட்டம் குறித்த கேள்விக்கு.?
தேர்தல் மற்றும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய பேருந்துகள் வாங்க ஏற்பாடு நடைபெற உள்ளது நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்த வழக்கு முடிந்த உடன் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

போக்குவரத்து பணிமனைகளில் கேமரா பொருத்தும் திட்டத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு.?
பேருந்து பணிமனைகளில் புதிய கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது., சென்னையில் 2,500 இடங்களில் பேருந்து பணிமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து., மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்ப குறித்த கேள்விக்கு.?
போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் நிரப்ப உள்ளதாகவும்., தேர்தல் மற்றும் பண்டிகைகள் முடிந்தவுடன் முதல்வரின் ஆலோசனையை பிறகு பணிகள் அமைக்கப்படும்.

போக்குவரத்து துறையில் சம்பள பற்றாக்குறை குறித்த கேள்விக்கு.?
48 ஆயிரத்து 154 கோடி ரூபாய்க்கு போக்குவரத்து துறை நட்டத்தில் செல்கிறது. அதனை சரி செய்வதற்கு தொழிற்சங்க செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கான அரசு திமுக., தொழிலாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்து அரசு பரிசீலனை செய்து., முதல்வரின் ஆலோசனைப்படி தீர்வு காணப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *