சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 46) மனைவி ஸ்ரீதேவி (வயது 43) இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும் ஸ்ரீநாத் (வயது 15) என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீதேவி பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜெகநாதன் தனது 21 வயது முதல் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நக்சல் ஒழிப்பு பகுதிகள். மற்றும் காஷ்மீர் பஞ்சாப் எல்லை பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் காறனமாக அசாம் எல்லை பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிவிட்டு எல்லைப் பகுதியில் பணியில் இருந்த பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருடன் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் உடல் இன்று காலை விமான மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அவர் குடும்பத்தினரும் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் தேசியக்கொடி மரியாதை மற்றும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேசியக்கொடி அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் உடலை தகனம் செய்ய உள்ளனர்.