• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் வழியாக டிரோன்கள் மூலம் ஆயுத கடத்தல்

Byகாயத்ரி

Feb 10, 2022

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்குள் எல்லை வழியாக சமீப காலமாக டிரோன்கள் மூலம் போதை பொருட்கள், ஆயுத கடத்தல் செய்யப்படுகிறது.

பஞ்சாபில் உள்ள தீவிரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் இவை சப்ளை செய்யப்படுகின்றன. இதுபோல் நடந்த பல முயற்சிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்து உள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இதன் மீது வழக்கம் போல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

டிரோனின் சத்தம் கேட்டு உஷாரான வீரர்கள், அதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி சென்றது. இதைத் தொடர்ந்து, டிரோன் பறந்த பகுதிகளில் வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, டிரோனில் இருந்து வீசப்பட்ட 2 பைகள் இருந்தன. ஒன்றில் போதை பொருட்களும், மற்றொரு பையில் துப்பாக்கியும் இருந்தன.