நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.

காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரி தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் குவிந்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் உள்ளே மாணவர்களை அனுமதிக்ககோரி தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)