• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வாக்குவாதம்..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பு பேனர் கூட வைக்க முடியாத நிலையில் ஊராட்சி செயலாளர் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை பல நாட்களாக தேங்கி கிடப்பதாகவும் இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவித்தால் பொதுமக்களின் புகாரை உதாசீனப்படுத்துவதாகவும் கூறுகின்றனர். விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் திருப்பதி மஹால் எதிரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஊராட்சி செயலாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு இருந்தனர் மேலக்கால் ஊராட்சி செயலாளராக உள்ள விக்னேஷ் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி ஊராட்சி செயலாளராகவும் பொறுப்பு வகிப்பதால் இரண்டு ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆகையால் இது குறித்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் இரண்டு ஊராட்சிகளிலும் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் ஊராட்சி செயலாளர் முறையாக வருவதில்லை ஊராட்சி அலுவலகத்திற்கு எப்போது சென்றாலும் பூட்டியே கிடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தினசரி திறந்து பொதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும் எனவும் அரசுக்கு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.