• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலைய மேலாளர் முற்றுகையிட்டு வாக்குவாதம்.,

ByAnandakumar

May 27, 2025

ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி வரை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயில் வண்டி வழக்கமாக தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக இந்த ரயில் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி வந்தனர். இந்நிலையில் கரூரிலிருந்து திருச்சி செல்லும் ரயில்வே பாதையில் திருச்சி அருகே பராமரிப்பு வேலை நடைபெற்று வருவதால் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த வழியில் ரயில்கள் இயங்காது என சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் இந்த ரயிலில் வந்து பயணம் செய்த அனைவரும் கரூரிலேயே இறக்கிவிடப்பட்டனர். இதனால் கைக்குழந்தையுடன் பயணிகள் சுமார் 1:30 மணி நேரத்துக்கு மேலாக ரயில் நிலைய காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து கரூர் நிலைய மேலாளரிடம் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இது குறித்து நிலையை மேலாளர் பயணிகளிடம் மதியம் 12 45 மணிக்கு பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரயிலில் ஏறி திருச்சி செல்லுமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் பயணிகள் நாங்கள் ஈரோட்டிலேயே டிக்கெட் எடுக்கும் பொழுது கூறியிருந்தால் மாற்று வழி ஏற்பாடு செய்திருப்போம். கரூர் வந்தவுடன் இந்த தகவலை எங்களிடம் தெரிவித்தால் ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு என வாக்குவாதம் செய்தனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.