விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் (மதிமுக) ரகுராமன் ஆய்வு செய்தார். அப்போது ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வந்த பெண்மணியிடம் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் அரசு அதிகாரிகள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்பதற்காகவே முதல்வர் சிறப்பு முகாம் நடத்துகிறார்,

முகாமிலும் சரியாக வேலை பார்ப்பதில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்து தாசில்தாரை வர சொல்லுங்கள் என ஆவேசமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கேட்ட முகாமில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை கண்டித்து இரண்டு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)