• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீங்கள் தடுப்பூசி போடாதவரா? உங்களால் தான் 4ம் அலை வரப்போகிறது

ByA.Tamilselvan

Apr 26, 2022

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால், மற்றவர்களுக்கு தொற்று அபாயம் இருப்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவின் பரவல் குறைந்துவந்தது.தற்போது மீண்டும் சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா மிகவேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் மிக வேகமாக குறைந்துவந்த தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 4ம் அலை துவங்கி விட்டாதக செய்திகள் வரதொடங்கியுள்ளன.
இந்நிலையில் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஒருவருக்கொருவருடனும், தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டக் குழுவினருடனும் இணைந்து பழக விட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகளை கனடா மருத்துவ சங்க பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறியிருப்பதாவது:
தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிநபர் விருப்பம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், தடுப்பூசி போடுவதை கைவிட்ட நபர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பது எங்களது ஆய்வில் தெரிய வந்தது. தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் நெருங்கி பழகும் போது தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்கள் சதவீதம் அதிகமாக இருந்த போதிலும் இந்த அபாயம் நிலவுகிறது.
இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், 2 வதுதவணை ஊசி போடாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்.நான்காம் அலை வருவதை தடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.