• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

டிகிரி முடித்தவரா நீங்கள்… ஐடிபிஐ வங்கியில் வேலை ரெடி

ByA.Tamilselvan

May 25, 2023

உலகின் பலநாடுகளில் கிளைகளை அமைத்துள்ள ஐடிபிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1,513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1,013 மையங்கள் மற்றும் 2,713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10வது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும். இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும்.
இந்த வங்கி தற்போது Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.04.2023 முதல் 07.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். பதவி: Executive காலிப்பணியிடங்கள்: 1036 வயது வரம்பு: வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.34,000 தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவ பரிசோதனை விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி/PwD/ESM பிரிவினர்களுக்கு ரூ.200 மற்றவர்களுக்கு ரூ.1,000. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/idbiemar23/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.