• Fri. May 3rd, 2024

தொல்லியல் கண்காட்சியை துவக்கி வைத்த தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு …

ByKalamegam Viswanathan

Oct 31, 2023

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தங்க அரியலன்கள். சங்கு வளையல்கள், சுடுமண் உருவ பொம்மை, தண்ணீர் சேமித்து வைக்கும் குடுவைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்வில் தற்போது சூது பவள மணிகள், தங்க அணியாளர்கள், செப்பு காசுகள், தலையுடன் கூடிய திமிழ் காளைகள் உள்ளிட்ட 4600 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிடுவதற்கான வைப்பாற்றும் கரையும் வரலாற்று தடம் மாநில அளவிலான வரலாற்று மற்றும் தொல்லியல் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் துவங்கப்பட்டது. கண்காட்சியை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இன்று துவங்கப்பட்ட கண்காட்சியில் சுமார் 2600 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மாநிலம் முழுவதிலும் நடைபெறும் அகழ்வாராய்ச்சி குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ராஜுக்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்து அரங்கில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும்போது தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் வளர்ச்சி மற்றும் அகழாய்வு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதல்வர் அதிகம் கவனம் செலுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றும் தற்போது வரையில் கீழடி மற்றும் வெம்பக்கோட்டை அகழாய்வு பணிகளில் அடுத்த கட்ட ஆய்வு விரைவில் துவங்க உள்ளதாகவும் தற்போது வரையில் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை பகுதியில் 4600 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 2,600 பொருட்களை தற்போது காட்சிப்படுத்த மட்டும்தான் விரைவில் அனைத்து பொருட்களும் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு அதில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்கில் நம் முன் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்தும் நமது நாகரிகம் குறித்தும் அறிந்து உள்ள இந்த கருத்தரங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நகராட்சி சேர்மன் பவித்ரா சாம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *