விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டவுன் லயன் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் ஆவாரம்பட்டி முருகன் நடுநிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் டவுன் லயன்ஸ் சங்கம் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார் முருகன் நடுநிலைப்பள்ளி செயலாளர் தலைமை ஆசிரியரான மாரியப்பன் முன்னிலை வகித்தார்

இந்த கூட்டத்தில் டவுன் லயன் சங்க பட்டய தலைவர் ராம்சிங் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் மகேஸ்வரன் ஆகியோர் ஆசிரியர்கள் குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களை எந்த விதத்தில் நல்வழிப்படுத்து
கின்றார்கள் மாணவர்கள் எவ்வாறு தங்களுடைய கடமைகளை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தி பல உயர் பதவிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர்களை நாம் மதிக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்கள்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மாரியப்பன் .
மனோன்மணி . சீதாரமணி .சங்கர் . கற்பகம். சங்கரநாராயணன். ரோகினி. கவிதா. பரமேஸ்வரி .உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தனர்
