கபடி போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஒன்றியங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் திருச்செந்தூர் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கபடி போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு வெற்றி கோப்பையையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், கபடி பயிற்சியாளர் தீபன்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
