• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கு உலக மகளிர் தினத்தில் பாராட்டு விழா…

ByNamakkal Anjaneyar

Mar 8, 2024

திருச்செங்கோட்டில் உள்ள வி எல் என்ற ஜவுளி நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தின விழாவில்வதிருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது கொக்கராயன் பேட்டை ரோட்டில் உள்ள வேலவன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 17 பெண் நகர் மன்ற உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும்நிறுவன உரிமையாளர்கள் விஜய் மற்றும் அஞ்சலி விஜய் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பேசும்போது கூறியதாவது..,

பெண்கள் இல்லாத துறையே இல்லை. பெண்கள் இல்லாவிட்டால் எந்தத் துறையும் இல்லை. கல்வி தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ந்துள்ள நிலையில் நமது வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்து சமூக எதிர்ப்புகளை சந்தித்து நம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ள மூத்தோர்களை நினைவு கூர்ந்து மேலும் வளர்ச்சி அடைய உழைக்க வேண்டும்என கூறினார்.