• Fri. Jan 17th, 2025

திருச்செங்கோட்டில் இருந்து கோவைக்கு கொக்கராயன் பேட்டை வழியாக, புதிய வழித்தட பேருந்து துவக்க விழா..,

ByNamakkal Anjaneyar

Mar 8, 2024

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருச்செங்கோட்டில் இருந்து கோவைக்கு கொக்கராயன் பேட்டை வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்க விழா திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தங்கள் ஊர் வழியாக வந்த பேருந்துக்கு கொக்கராயன் பேட்டை பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, கோட்ட மேலாளர் வணிகம் பாண்டியன் திருச்செங்கோடு கிளை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு, கொக்கராயன் பேட்டை உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கோவைக்கு கல்லூரி, மருத்துவ தேவைகளுக்கு செல்ல ஈரோடு அல்லது திருச்செங்கோடு வந்து ஈரோடு வழியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் நேர விரையம் ஏற்பட்டு வந்தது. இதனால் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன் பேட்டை வழியாக ஒரு பேருந்து இயக்கப் பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இது குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனுமதி கொடுத்து இன்று இந்த பேருந்து இயக்கப் படுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துக் கொண்டனர்.