விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியை சேர்ந்த கோகுல் கண்ணன், பூவநாதபுரத்தைச் சேர்ந்த கோகுல், பள்ளபட்டியை சேர்ந்தஅப்சரா, சிவகாசி சேர்ந்த ரீட்டா மகிமா, ஆகியோர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் அவர்களை பாராட்டி சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பாராட்டு விழா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் செல்வரராஜன் தலைமை வகித்தார்.

அவர் பேசியது மாணவர்கள் கல்லூரியில் பயிலும் காலத்தில் அரசு பணி தேர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. என்றும் மத்திய, மாநில, அரசுகள் நடத்தும் குடிமைப்பணி தேர்வுகளிலும், தொகுதி தேர்வுகளிலும், மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்லூரியின் பெயரை இந்தியாவிற்கு சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கல்வியே வாழ்க்கை உயர்த்தும் என்றும் உயர்வதிவில் மூலம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த இடம் என கூறினார். கலெக்டரை சந்திக்க முன் அனுமதி இருந்தால் தான் பார்க்க முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த பதவி ஆகும்.
மாணவ மற்றும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு அவசியம். 12 மணி முதல் 14 மணி நேரம் வரை உழைக்க தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்கள் ஐஏஎஸ் ,ஐபிஎஸ், தேர்வில் கலந்து கொள்வதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரும் .
அவர்கள் படிப்பதற்கு புத்தகங்கள் வழங்குவதற்கும் நூலகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.அதனை பயன்படுத்தி மாணவர்கள் மென்மேலும் உயர வேண்டும். மேலும் செல்போனில் நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.

நம் நாட்டை நிர்வகிக்க திறமை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உள்ளது. மாணவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதை பார்த்து மற்ற மாணவ மாணவியர்களும் ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படுள்ளது.
மாணவர் கோகுல் கண்ணன் பேசியது ஐஏஎஸ் மாணவராக வேண்டுமென எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் தயக்கம் காட்டக்கூடாது. இலக்குகளை அடைய தயக்கம் தடையாக இருக்கும் கூச்சத்தை விலக்க வேண்டும் .
தயக்கம் காட்டினால் நமது எண்ணம் நிறைவேறாது. கண்மூடித்தனமாக முன்னேறிச் செல்ல வேண்டும். விடாமுயற்சி அவசியமாகும். குடிமைப் பணி தேர்வு பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பூவநாதபுரம் ஆர் .கே. கோகுல், திருத்தங்கல் பள்ளபட்டியை சேர்ந்த அப்சரா, சிவகாசியைச் சேர்ந்த ரீட்டா மஹியா ஆகியோரும் தங்கள் வெற்றி பெற்றது குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக பேசினார்கள்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் வரவேற்று பேசினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.