• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு..!

Byதரணி

Jan 30, 2023

போக்குவரத்து விழிப்புணர்ச்சி வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
நெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நெல்லை மாநகரத்தை விபத்துகள் இல்லா மாநகரமாக உருவாக்கும் விதமாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை போக்குவரத்து காவல்துறை சார்பாக அதன் ஆய்வாளர் பேச்சி முத்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். கேடிசி நகர் அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை மற்றும் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல்துறை இணைந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி கேடிசி நகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை நிறுவனத் தலைவர், முனைவர். குணசேகர் அரிய முத்து, பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்களை பாராட்டினார்கள். மரக்கன்றை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் இயற்கையை பாதுகாக்கும் வண்ணம் மரக்கன்று வழங்கியமைக்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் அரிய முத்து அறக்கட்டளையினர்க்கு நன்றி கூறி பாராட்டினார்கள். நிகழ்வில் பென்ஸ் நிறுவன இயக்குனர் ரபீந்திர சைலபதி, போக்குவரத்து காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கருத்த பாண்டியன், போக்குவரத்து காவல்துறையைச் சார்ந்த காவலர்கள் முத்துக்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.