இந்திய தேசிய லீக் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தலைவி, பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜகாங்கீர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் மலர் வெளியீடு மாநில அமைப்பு செயலாளர் பக்ருதீன் வெளியிட்டார். மாவட்ட செயலாளர் இப்ராஹிம் பாபு வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
தென்மண்டல அமைப்பு செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் நாதா நியான், மாவட்ட பொருளாளர் கராத்தே அக்பர், மாநில செய்தி தொடர்பாளர் ஜாகிர் உசேன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் முகமது கான் மாவட்ட அமைப்பு செயலாளர் முகம்மது இக்பால் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நியமன நகல்களை மாநில தலைவர் பசீர் அகமது வழங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்திய தேசிய லீக் இணைந்துள்ள மாவட்ட செயல் தலைவியாக ஹலிமா பானு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டார். இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்தினார்கள்.