மதுரை உயர் மறை மாவட்ட பங்கின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மறை வட்ட பங்கிற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன் பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சீனியாபுரம் மக்களுக்கும் ஒருவர் இறந்துவிட்டால் சீனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் புதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ரைட்டன்பட்டி பகுதிக்கு தனியாக கல்லறை கேட்டு, தொடர்ந்து மதுரை மாவட்ட அதிபருக்கு மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை தனியாக கல்லறை ஒதுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று பேர் இறந்து விட்டனர். இந்நிலையில் கடைசியாக இறந்தவரை சீனியாபுரம் கல்லறையில் புதைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதை ரைட்டன்பட்டி பகுதி மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை வருவாய்த்துறை தலையிட்டு பிரச்சனையை ஓரளவிற்கு சரி பண்ணி வைத்தனர். மேலும், வருவாய்த் துறையினர் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை அன்று மதுரை உயர்மறை மாவட்ட பிஷப் பொறுப்பில் உள்ள பாளையங்கோட்டை உயர் மறை மாவட்ட பிஷப் மேதகு அந்தோணிசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர். சி. சர்ச்சிற்கு திருமண நிகழ்வுக்காக வருகை தந்தார். தகவல் அறிந்த சீனியாபுரம் பகுதி மக்கள் சர்ச்சில் குவிந்தனர். திருமணம் முடிந்ததும் பிசப்பை நேரில் சந்தித்து ரைட்டன்பட்டி பகுதிக்கு தனியாக கல்லறை கட்டுவதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர். தொடர்ந்து மக்களுக்கும் பிஷபிற்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் ஆறு மாத காலத்திற்குள் ரைட்ன்பட்டி பகுதிக்கு தனியாக கல்லறை கட்ட இடம் ஒதுக்கித் தருவதாக பிஷப் உறுதி அளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில் பங்குத்தந்தை சந்தன சகாயம் சீனியாபுரம் நாட்டாமை அமல்ராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
