• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி

BySeenu

Feb 28, 2025

பெரும் நிறுவனங்கள் தங்களின் கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் உள் அமைப்புகளை சீராக இயக்க தேவையான டிஜிட்டல் சான்றிதழ்களை தானாகவே மேலாண்மை செய்யக்கூடிய சேவைகளை வழங்கும் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான ஆப் வியூ எக்சை (AppViewX) அமெரிக்காவின் ஆஸ்டின் நகரத்தை சேர்ந்த ‘ஹவேலி இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ கையகப்படுத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட விரிவாக்கத்தை நோக்கி அதை நடத்திச்செல்ல சைபர் செக்யூரிட்டி துறையில் நீண்ட அனுபவம் கொண்ட டினோ டிமாரினோ இந்நிறுவனம் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

பெரிய நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் சான்றிதழ்கள் காலாவதியாகாமலும், சமரசம் ஆகமலும் இருப்பதை உறுதி செய்யும் சேவைகளையும், அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கணினிகளை, அமைப்புகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும் சேவைகளை வழங்கும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இதற்கு யு.கே. மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அலுவலகம் உள்ளது. மேலும் இந்தியாவின் கோவை மற்றும் பெங்களூருவில் சிறப்பு மையங்கள் உள்ளன.இந்த நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவை ஹவேலி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் எடுத்தபோது அதில் இந்தியாவின் வலுவான தொழில்நுட்ப சூழலையும், இங்கு உள்ள திறமையான பணியாளர்களையும் கருத்தில் கொண்டு ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ளது.

இந்த துறையில் ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் சிறந்து விளங்க தேவையான பெரும் நிதி மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் இரண்டுமே இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைகு பின்னர் கிடைத்துள்ளது.புது தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற டினோ டிமரினோ பில்லியன் டாலர் மதிப்புள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் தலைமை பண்புகளையும் இந்த நிறுவனதிற்கு கொண்டு வருகிறார். ஸ்நைக் நிறுவனத்தில் அதன் ஆண்டு வருமானத்தை $ 65 மில்லியனிலிருந்து $ 220 மில்லியனாக 2 ஆண்டுகாலத்தில் உயர்த்தி காட்டியுள்ளார். மேலும் மைம்காஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிய போதுஅதன் வருவாயை 5 ஆண்டுகளில் $ 100 மில்லியனிலிருந்து $ 600 மில்லியனாக மாற்றி காட்டிய குழுவில் இடம்பெற்றுள்ளார். எனவே ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு இவர் அழைத்து செல்வார் என நிறுவனம் உறுதியாக நம்புகிறது.படினோ டிமாரினோவுடன்,ஜிம் வாசில் தலைமை நிதி அதிகாரியாகவும்,ஸ்டீபன் டார்ல்டன் தலைமை வருவாய் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.இது பற்றி இந்த நிறுவனத்தின் புது தலைவராக பொறுப்பேற்றுள்ள க்ரெக்கரி வெப் கூறுகையில், டினோ-வின் தலைமைபண்பும் அவரின் அனுபவமும் இந்த நிறுவனத்தின் வெற்றியின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்க வழிவகுக்கும். இதன் தலைவராக உள்ள நான் அவருக்கும் எங்கள் குழுவுக்குமான அனைத்து ஆதரவையும் கொடுக்க ஆவலாக உள்ளேன்,” என்றார்.