• Wed. Apr 23rd, 2025

மதுக்கரை ஸ்ரீ மல்லையன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 29 வது ஆண்டு விழா

BySeenu

Feb 28, 2025

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன…

கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் பள்ளியின் 29 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது..பள்ளியின் தாளாளர் சண்முகம் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் சந்தோஷ் மல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்.சி.சி.இளைஞர் பிரிவின் புரோகிரோம் மேனேஜர் திருவேங்கடசாமி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடேயே உரையாடினார்..அப்போது பேசிய அவர்,மாணவர்கள் கல்வி கற்கும் போது நல்ல பண்புகளை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..கல்வி பயிலும் போதே மாணவர்கள் தங்கள் தனித்திறன்களையும் வளர்த்தி கொள்வது அவசியம் என குறிப்பிட்டார்.

விழாவில் கவுரவ அழைப்பாளராக பாரதியார் பல்கலைகழகத்தின் முன்னால் பேராசிரியர் பொருளாதார துறை தலைவர் முனைவர் கோவிந்தராஜன் கலந்து கொண்டார்.விழாவில் மாணவ,மாணவிகள் தங்களது பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்..இதில் ,தமிழர் பாரம்பரிய கலைகளை கூறும் விதமாக மயிலாட்டம்,கரகாட்டம்,காவடியாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.குறிப்பாக பல்வேறு வண்ண உடை அணிந்த மழலை குழந்தைகள் மேடைகளில் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.முன்னதாக கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மற்றும் மாவட்ட,மாநில விளையாட்டு போட்டிகளில் சிறந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர் ரேகா மணிகண்டன்,மற்றும் ஸ்ரீ பி.மல்லையன் பள்ளி நிர்வாகிகள் மனோன்மணி சண்முகம்,ஜோதிமணி சரவணன், கிருத்திகா ஜெயகுமார், உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் ஊழியர்கள் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.