• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எங்கும் திரிஷா.. எதிலும் திரிஷா… த்த்திரிஷா.. த்த்திரிஷா!!

Byகாயத்ரி

Sep 13, 2022

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக, என்றென்றும் இளமை பொங்க பார்போரெல்லம் திரிஷா.. திரிஷா என்று கூச்சலிட, தன் சினிமா பயணத்தில் கம்பீரமாய் 23 வருடங்கள் சலைக்காமல் அதே இடத்தில் நின்று தன் பொன் சிரிப்பால் கவர்ந்திழுக்கும் ஜானுவாகவும், ஜெஸியாகவும், தற்போது குந்தவையாகவும் ரசிகர்களுக்கு காட்சி தர இருக்கிறார் நடிகை திரிஷா…

இப்போது எந்த சோஷியல் மீடியாவை திறந்தாலும் திரிஷா தான்.. அரசியலில் இறங்கும் திரிஷா..விஜய்யுடன் மீண்டும் நடிக்கும் திரிஷா…போன்ற செய்திகள் திரிஷாவின் ரசிகர்களை அப்டேட்டிலே வைத்துள்ளது. இதுபோக பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷா இப்படத்தின் டீசர் ரிலீஸ், ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெயிட்டிங்கிலே அவரது ரசிகர்களை வெறியேற்றி வருகிறார். ஒரு historic queen கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவிற்கு மிகவும் விருப்பம் என அவரே தெரிவித்திருந்தார். அந்த கனவு நினைவாகிவிட்டதாக பல மேடைகளில் தெரிவித்திருந்தார் திரிஷா. உங்களை ராணியாக பார்க்க உங்கள் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் குந்தவை அவர்களே..!!! ஜானு, ஜெஸி போல் குந்தவையையும் நினைவுப்படுத்துவார் என்கிறார்கள் திரிஷாவின் ரசிகர்கள் பட்டாளம். நாமலும் அவருக்கு ஒரு வாழ்த்தை போட்டுவிடுவோம்..!