திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு ஊராட்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்காக ஆர் எஸ் எஸ் மோடி செய்த சதியிலே கூட்டாளியாக இருக்கும் பழனிசாமியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களைப் பொறுத்தவரை கருத்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காக்க வேண்டும் அரசியல் சட்டத்தின் வாயிலாக கிடைத்த இந்த உரிமையை பறிக்கின்ற செயலை கண்டித்து பாராளுமன்றத்தில் கருப்பு சட்டமாக நிறைவேற்றப்பட்டு இருக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து மக்களிடம் கொண்டு செல்வதற்கான முதல் படி இது தொடர்ந்து பல வகையில் வேலை மக்களின் வேலைவாய்ப்பு திட்டத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
பாஜக ஆர்எஸ்எஸ் திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்ய விரும்புகிறது அவர்களை பொறுத்த அளவில் இந்தியா முழுவதும் அவளுக்கு பிடித்த இடங்களில் மதக்கலவரம் நடந்திருக்கிறது ஆர் எஸ் எஸ் உடைய முதல் அடியே மத கலவரத்தை தூண்டுவதாக தான் இருக்கும்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பல ஆண்டுகளாக முயற்சித்தவர்கள் இப்போது அதை திருப்பரங்குன்றத்தில் அதே மதகலவரத்தை உருவாக்குவதற்கான ஆர்எஸ்எஸ் இன் சதியின் முறியடிக்கப்பட வேண்டும் அவர்களின் பொய் பிரச்சாரங்களும் முறியடிக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் எப்போதுமே அனைத்து மதங்களும் சார்ந்த அமைதியான முருகனின் இடமாக இருக்கிறது அங்கு அரசியல் செய்வதற்கு வெளியூர்காரர்களை அழைத்து வந்து பாஜக செய்கின்ற சதித்தட்டங்களை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை.
பியூஸ் கோயல் தனியாக வரவில்லை அவர் வரும்போது அவருடன் சிபிஐ அதிகாரிகளையும் இடி அதிகாரிகளையும் அழைத்து வந்துள்ளார் .
பியூஸ் கோயல் பொறுத்த அளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கின்ற அமித்ஷா அதிமுகவுடன் பேசுவதற்காக அமித்ஷா அனுப்பி வைத்த பியூஸ் கோயில் அமித்ஷாவின் கட்சிக்காக இடம் பேச வந்தார்.
அந்தப் பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்பு தான் இபிஸுக்கும் ஓபிஎஸ் க்கும் நடக்கின்ற போட்டி என்பது அதிமுகவின் இறுதி காலத்திற்கு, எம்ஜிஆரின் நினைவு நாளை என்று அனுசரிக்கிறோம் அவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அண்ணா திமுகவாக இருந்தது அமித்ஷா திமுகவாக மாறியதன் விளைவாக இந்த நிலை தொடர்கிறது அமித் ஷாவின் அடிமைகளாக எப்போதுவரை இருக்கிறார்களோ முக்கியமாக இந்த நிலைதான் அந்த கட்சிக்கு தொடரும் அந்த கட்சியை பொறுத்த அளவில் அதை முடித்து வைப்பதற்காக அமித்ஷா தொடர்ந்து சதிகளை செய்திருக்கிறார். இப்போது பியூஸ் கோயல் கடைசி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
எங்களுடைய தலைமை ஜோடேகர் தலைமையில் குழு அமைத்து டெல்லியில் இருந்து வந்து தமிழக முதல்வரை சந்தித்து விட்டு சென்று இருக்கிறார் திமுகவுடன் ஆன கூட்டணி பேச்சுவார்த்தை முதல் கட்டமாக குழு அமைத்ததற்கு பிறகு தொடங்கும்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்வார்கள் காங்கிரஸ் கட்சியை பொறுப்பாளர்கள் எங்கள் நோக்கம் தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக நுழையாத ஆட்சியை உருவாக்க வேண்டும் பாஜக ஆர் எஸ் எஸ் தமிழகத்திற்கு ஆபத்தான இயக்கங்கள் அவர்கள் அதிமுகவை அமித்ஷா திமுக மாற்றிய பிறகு கைப்பற்றுவதற்கான முயற்சி நடைபெறுகிறது அது தோல்வி வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழக மக்களுடைய பிரச்சினைகளை மையப்படுத்துகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி அமையும்.
எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களைப் பொறுத்த அளவில் தமிழக முதல்வர தெடந்து கரூர் சம்பவத்திற்கு பிறகு பேசினார். அதைப்போலவே விஜய் இடமும் பேசினார் அவரிடம் இவர் சொன்னது இந்த இழப்பு என்பது உங்களின் கட்சிக்காரர்களின் இழப்பாக இருக்கலாம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிப்பட்ட கடுமையான நேரத்தில் உங்களிடம் இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார் அதை ஆதவர் அர்ஜுன் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தியை பொறுத்தளவில் மனிதநேயத்துடன் தமிழகத்தில் எந்த இழப்பு ஏற்பட்டாலும் அதற்காக வருந்துவதும் அதற்காக அவர் பேசுவதும் எந்த ஒரு உள்நோக்கத்துடன் செய்யவில்லை அவரைப் பொறுத்தவரை மனிதநேயத்துடன் செய்திருக்கிறார்.
முதலில் பேசத் தொடங்கட்டும் குழு அமைத்துள்ளார்கள் எங்களை பொறுத்த அளவில் அது நல்லபடியாக நடக்கும் ஐந்து பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி சார்பாக பொறுப்பாளர் ரித்தீஷ் ஜோடகர் மற்றும் செல்வப் பெருமையுடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள் அந்த குழு பேசி நல்லது வரும் என்று நம்புகிறோம்.
தமிழக வெற்றி கழக கட்சி தலைவராக இருக்கிறார் மக்களிடம் அவருக்கான ஆதரவு தேர்தல் வரும்போது தெரியும் இது பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் அவர் மீது அன்பும் வைத்திருக்கலாம் அவருடைய நடிப்பை ரசித்திருக்கலாம் மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் வருவேன் என்று சொல்வது நம்பிக்கை அளிக்கிறது.

விஜயிடம் தான் கேட்க வேண்டும் எங்களைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யக்கூடாது ஆர்.எஸ்.எஸ் ஒரு பாட்டலுடன் வருகிறது தமிழகத்தில் நுழைவதற்காக பல இடங்களில் முயற்சி செய்கிறார்கள் இந்த முறை
திருப்பரங்குன்றம் என்பது அவர்களின் ஒரு ப்ராஜெக்டாக செய்து இருக்கிறார்கள் முருகன் மாநாடு தொடங்கி தொடர்ந்து பல வகைகளில் கலவர பூமியாக மாற்ற வேண்டும் மதுரையின் அமைதியை குறைக்க வேண்டுமஎன்று முயற்சி செய்கிற இயக்கமாக அரசு உள்ளது இதை நிறுத்துவது தான் எங்கள் முதல் கடமை என மாணிக்கம் தாகூர் கூறினார்.




