தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடு நாயகமாக வீற்றிருக்கும் காளியம்மன் திருக்கோயில் பொங்கல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வாக நேற்று விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் ,பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் அக்கினி வளர்க்கப்பட்டு, அங்கு முறைப்படி விரதமிருந்த பக்தர்களுக்கு, வாயில் பெரிய அலகுகள் குத்தப்பட்டு ,அங்கிருந்து ஊர்வலமாக முனியாண்டி கோவில், மீனாட்சி அம்மன் கோவில் வழியாக வந்து, அருள்மிகு காளியம்மன் கோவிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும் என்று கோவில் நிர்வாகஸ்தர்கள் தெரிவித்தனர்.