• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புகையிலை எதிர்ப்பு வாக்கத்தான், சைக்கிளத்தான் – ஏராளமானோர் பங்கேற்று பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு…

BySeenu

Jun 3, 2024

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் சைக்கிளத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான பங்கேற்றனர்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் சைக்கிளத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுனன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனத்துடன் உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயனம் மேற்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை எந்தியபடி சென்றனர். சைக்கிளிங் மற்றும் நடைப்பயணத்தின் போது புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.