• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ரூ.65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்..,

வாடிப்பட்டி மோட்டார் வாகன ஆய்வா ளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீரென நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அளவி லான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வாடிப்பட்டியில் பழைய நீதிமன்றம் அருகில் தனியார் கட்டிடத் தில் உள்ளது.

இங்கு நேற்று மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பிரபு, சூரியகலா, ஜெயபிரியா மற்றும் போலீசார் திடீரென புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையில் போலீசார் வருகையின் போது அலுவலகத்தில் இருந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அங்கு நடந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.