• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை…

ByG. Anbalagan

May 6, 2025

நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம். இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் இன்று உதகை பாலிடெக்னிக் அருகே வாடகை வீட்டில் வசித்து வரும் ரஷ்யா பேகம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தூனேரி கிராமத்தில் தனது தம்பி பெயரில் வீடு கட்டி உள்ளதாகவும், அதேபோல் தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் வீடு மற்றும் கார் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் 50 லட்சத்திற்கும் மேலாக சொத்துக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.