• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தேன் பட கதாநாயகனுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் கிட்டத்தட்ட ஐம்பது விருதுகளை வென்று வந்துள்ளது.
இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


படத்தின் நாயகன் தருண்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் தேன் படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இந்தநிலையில் தேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார் தருண் குமார்.


.இதுபற்றி தருண் குமார் பேசும்போது, “ஒருவரின் கடினமான உழைப்புக்காக கிடைக்கும் விருது என்பது உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் எப்போதுமே பெற்றிராத சந்தோஷமான தருணங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.. இது தேன் படத்திற்காக நான் இரண்டாவது முறையாக பெறும் விருது.. முன்னதாக தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான முதல் விருதை பெற்றேன். தற்போது தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் எனது நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து,

அதற்காக இந்த சிறந்த நடிகர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து இன்னும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேன் படத்தில் நான் நடித்திருந்த வேலு கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒன்றாகவே இருந்தது. என் உடலில் உள்ள காயங்களும் தழும்புகளும் அந்த கடின உழைப்பை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

நீங்கள் உங்களுடைய இதயத்தையும் ஆன்மாவையும் நூறு சதவீதம் நேர்மையாக உங்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கும்போது அது எல்லைக்கோடுகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மக்களின் இதயங்களை தொட்டுவிடும். இதுபோன்ற விருதுகள் தான், நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான தூண்டுதலாக எங்களுக்கு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனது போராட்டத்திற்கும் கடின உழைப்புக்குமான ஒரு அங்கீகாரத்தையும் வெற்றியையும் இந்த படம் எனக்கு கொடுத்துள்ளது.


தர்பங்கா என்பது பீகார் மாநிலத்தில் கலைகளின் தலைநகரமாகும். அப்படிப்பட்ட தர்பங்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா என்பது இந்திய திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அந்த திரைப்பட விழாவில் எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருப்பதை ஒரு சாதனையாகத்தான் நான் கருதுகிறேன். மேலும் வரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் தேன் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது என்றார்.