• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

ByKalamegam Viswanathan

Feb 11, 2024

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் நூர் முகம்மது முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். மாணவ மாணவியரின் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் மாணவ மாணவியரின் சிலம்பம், கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம், நவீன நாடகம், நாட்டுப்புற நடனம், யோகா, ஆசனம், பிரமிடு, ஓவியம், கலையரங்க செயல்பாடுகள் முதலியன நடைபெற்றன.


விழாவில் விஜய் மக்கள் இயக்க மதுரை வடக்கு மாவட்ட தலைவர் கல்லானை, டாக்டர் மயூரி, துணை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி முருகன் வார்டு உறுப்பினர்கள், ஒத்தக்கடை அசார், அப்துல் கலாம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில் சமூக ஆர்வலர்கள் அசோக்குமார், முராபாரதி, ரமேஷ், பாலமுருகன், கரீம், முத்து குமார்,
சிடார் மைய நிர்வாகிகள் பால கார்த்திகேயன் ஈஸ்வரி, மஞ்சப்பை அறக்கட்டளை முகமது கனி, சிலம்ப மாஸ்டர் பாண்டி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை அருவகம், அனுசியா தொகுத்து வழங்கினர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ராஜவடிவேல் சுகுமாறன், மனோன்மணி, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சாந்தி , ராணி ஆகியோர் செய்திருந்தனர்.