கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கம்பம் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பள்ளி தலைமை ஆசிரியைக்கும் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கம்பம் சாதிக், சர்புதீன், சுந்தரி வீரபாண்டியன், சகிதா பானு மற்றும் ஹாஜி லண்டன் நாகூர்மீரான், வின்னர் அலீம், அமனுல்லா, சாதிக் அலி மற்றும் மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

